ADDED : செப் 16, 2026 03:28 AM

மதுரை: மதுரை சகோதயா பள்ளி காம்ப்ளக்ஸ் மண்டலம் 4 பிரிவு சார்பில் டேக்வாண்டோ போட்டி நடந்தது. இப்போட்டியில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 10 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் வென்றனர்.
12 வயது சண்டை பிரிவில் சம்யுக்தா, ஸ்ரீநிதி, நிகில் தங்கம் வென்றனர். இப்ரான் வெள்ளி வென்றார். குருசேகரன், ஆதித்யா வெண்கலம் வென்றனர். 14 வயது சண்டை பிரிவில் ஈஷா, ஹர்ஷ வர்தன், தர்ஷினி, சுதீப் தங்கமும், முகுந்த் கிரிஷ், சந்தோஷ் துரைராஜ், தயாநிதி, ஜாரா வெள்ளியும், விக்னேஷ் சரண், சஞ்சய் , ரித்துல்யா,ராஜஸ்ரீ ஹரி வெண்கலமும் வென்றனர்.
17 வயது சண்டை பிரிவில் வைஷ்ணவி, ராகவி, ஹரி சரவணா தங்கமும், நிதிஷ், ஷஷாங்க் , தீபிகா, சிபிராஜ் வெள்ளியும், தான்யா வெண்கலமும் வென்றனர். 19 வயது சண்டை பிரிவில் அகில் குமார், சபரி வாசன் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் நாராயணன், கவுரி சங்கர், நவீன் குமார், பாலமுருகன் பாராட்டினர்.
