ADDED : பிப் 08, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் ஊர்க்காவல்படைக்கு பிப்.11ல் ஆள் சேர்ப்பு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. கல்வித் தகுதி பத்தாவது வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை. வயது 20 முதல் 45 வரை. ஆண்களுக்கு உயரம் 165 செ.மீ.,பெண்களுக்கு 155 செ.மீ. என்.சி.சி., விளையாட்டு வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மதுரை தல்லாகுளம், கோகலே ரோட்டிலுள்ள
ஊர்க்காவல்படை அலுவலகத்தில் இன்று (பிப்.8) காலை 10:00 மணி முதல் பிப்.10 மாலை 6:00 வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கு வரும் போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், பாஸ் போர்ட் போட்டோ 2, ஆதார் அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும் என ஊர்க்காவல்படை வட்டார தளபதி அறிவித்துள்ளார்.
