/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செஞ்சிலுவை சங்க தேர்தல் துவக்கம்
/
செஞ்சிலுவை சங்க தேர்தல் துவக்கம்
ADDED : ஜன 03, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உயர்நீதி மன்ற உத்தரவுப்படி மதுரை உட்பட சில மாவட்டங்களில் செஞ்சிலுவை சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவுபடி வாக்காளர் பட்டியலில் 630 பேர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. ஜன.6 மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள்.
நேற்று வழக்கறிஞர் முத்துக்குமார், ராமமூர்த்தி, ராஜகோபால், சுந்தரராஜன், பாண்டீஸ்வரி, அர்ஷத், அறிவழகன், சித்திக் உட்பட 15 பேர் தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலக மேலாளர் (சிரஸ்தார்) சரவணனிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
ஜன. 7 ல் மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

