ADDED : செப் 21, 2026 06:44 PM
மதுரை: மதுரை கே.எல்.என்., கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் சார்பில் மண்டல அளவிலான இளைஞர் வானியல் அறிவியல் மாநாடு நடந்தது.
செயலாளர் கணேஷ், பொருளாளர் சிவபிரசாத், இணைச் செயலாளர் பூர்ணிமா, மன்ற பொதுச் செயலாளர் மனோகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் சிந்தியா, சித்ராதேவி தொடங்கி வைத்தனர்.
பெங்களூரு இந்திய வானியல் நிறுவன விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் (பொறுப்பு) கார்த்திக், அஸ்ரோ கிளப் மதுரை செயலாளர் மகேஷ்வரி, ஸ்ரீதர், உதவி பேராசிரியைகள் சரஸ்வதி, உமாதேவி, தமிழ்நாடு அஸ்ட்ரோ கிளப், அறிவியல் சங்கம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட 58 மாணவர்கள் சேலம் மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். சித்ராதேவி நன்றி கூறினார்.
