ADDED : செப் 29, 2024 04:21 AM
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ, பளு துாக்கும் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
போட்டி முடிவுகள்
மாணவர்கள் 49 கிலோ, 55 கிலோ பிரிவுகளில் ராமநாதபுரம் அழகர், கேமநாதன், 61, 67 கிலோ பிரிவில் விருதுநகர் ஸ்ரீகரன், நெல்சன்ராஜ், 81 கிலோவில் மதுரை ஹரீஷ், 89 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் விருதுநகர் ரோஹித் முதலிடம் பெற்றனர்.
மாணவிகள் 40 கிலோ, 45, 49, 64 கிலோ பிரிவுகளில் ராமநாதபுரம் நாகலட்சுமி, ரோகிணி, சந்தியா, பூஜிதா, 55 கிலோ, 59 கிலோ பிரிவுகளில் மதுரை ஹரிணிகா, தன்ஷிதா, 71 கிலோ, அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் விருதுநகர் ஹரிணி, யோகேஸ்வரி முதலிடம் பெற்றனர்.
பீச் வாலிபால் போட்டியில் மதுரை முத்துவர்ஷா, தீக் ஷா, டென்னிஸ் போட்டியில் மதுரை லானிகா முதலிடம் பெற்றனர்.
ஆடவர் ஜூடோ 50 கிலோ, 55, 73 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவுகளில் மதுரை கிேஷார்குமார், சிலம்பரசன், கிருத்திக் ஸ்ரீராஜ், 60, 66, 73 கிலோ பிரிவுகளில் தேனி யோகித்சர்மா, அப்துல்யசீர், மணிகண்டன் முதலிடம் பெற்றனர்.
மாணவிகள் 48 கிலோ, 70 கிலோ பிரிவுகளில் தேனி இத்திகா ரோஸ்னி, பிரியா ஸ்ரீ, 52 கிலோவில் விருதுநகர் ஸ்ரீவித்யா, 57 கிலோ, 70 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ரிஜி ஆனந்தி, ரித்திக் ஜனோபர், 63 கிலோ பிரிவில் மதுரை அழகுநந்தினி முதலிடம் பெற்றனர்.