UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 08:07 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மதுரை மண்டல அளவிலான வூசூ விளையாட்டுப் போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் துணைகமிஷனர் வனிதா தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆணைய மண்டல முதன்மை மேலாளர் வேல்முருகன் பரிசு வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பயிற்சியாளர் தங்கபாண்டியன், மாவட்ட வூசூ சங்கத்தலைவர் பழனிகுமார், செயலர் முத்துக்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் சங்க செயலாளர் ஜாக்கி சங்கர் கலந்து கொண்டனர்.
