/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதிவுத்துறை வருவாய் மதுரை மண்டலம் முன்னிலை அமைச்சர் மூர்த்தி தகவல்
/
பதிவுத்துறை வருவாய் மதுரை மண்டலம் முன்னிலை அமைச்சர் மூர்த்தி தகவல்
பதிவுத்துறை வருவாய் மதுரை மண்டலம் முன்னிலை அமைச்சர் மூர்த்தி தகவல்
பதிவுத்துறை வருவாய் மதுரை மண்டலம் முன்னிலை அமைச்சர் மூர்த்தி தகவல்
ADDED : ஆக 22, 2025 03:35 AM
மதுரை: வருவாய் ஈட்டுவதில் மதுரை மண்டலம் பதிவுத்துறை தற்போது முன்னிலை வகிக்கிறது என அத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.
வணிகவரி, பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேசியதாவது: அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு இத்துறை அலுவலர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். கடந்தாண்டை விட மதுரை மண்டலம் அதிக வருவாய் ஈட்டித்தந்து தற்போது முன்னிலையில் உள்ளது.
துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். களப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள ஆவணங்களை உரிய நபர்களுக்கு வழங்குதல், ஆவணங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
மதுரை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த், உதவி பதிவுத்துறை தலைவர் (மதுரை வடக்கு) சுடர்ஒளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.