/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்தில் ஜூன் 26ல் ஒத்திகை
/
விமான நிலையத்தில் ஜூன் 26ல் ஒத்திகை
ADDED : ஜூன் 21, 2025 03:39 AM
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விமான நிலைய (பொறுப்பு) இயக்குனர்இளம்பரிதி, மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் கமல்குமார், அனைத்து விமான நிறுவன அதிகாரிகள், தீயணைப்புத்துறை மேலாளர் ஹரிக்குமார், உதவி மேலாளர் சிவன், உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், அவசரகால பேரிடர் மீட்பு பணி அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஜூன் 26ல் மதுரை விமான நிலைய ஓடுபாதையில் விமான விபத்து மற்றும் தீவிர பாதுகாப்பு குறித்து அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற உள்ளது.
இந்த பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் பயங்கரவாத தாக்குதல், விமான விபத்து போன்ற அவசர காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் விமான பயணிகளை மீட்கும் ஒத்திகை பயிற்சி அலுவலர்களுக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.