/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டால் உறவுகள் சீராகும்: உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
/
தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டால் உறவுகள் சீராகும்: உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டால் உறவுகள் சீராகும்: உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டால் உறவுகள் சீராகும்: உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு
ADDED : ஜன 07, 2024 06:52 AM
மதுரை: ''யாராக இருந்தாலும் தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டு விட்டு கொடுத்தால் தான் உறவுகள் சீராக இருக்கும்'' என மதுரையில் கேசவ சேவா சங்கம் நடத்திய சக்தி சங்கமம் மகளிர் மாநாட்டில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
நிகழ்ச்சியில் மதுரை சாரதா சமிதி நிர்வாகி யதீஸ்வரி கதாதப்ரியா ஆசி வழங்கினார். திருப்பாலை பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவி தலைமை வகித்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, வழக்கறிஞர் கனிமொழி பேசினர். வழக்கறிஞர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, விவேகானந்த கேந்திர நிர்வாகி கீதா, பேராசிரியை சுகந்தா, சக்தி சங்கம நிர்வாகிகள் உமா, உமாராணி கலந்து கொண்டனர்.
நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது: பெண்களுக்கு மனதளவில் அபரிமிதமான சக்தி உண்டு. அதனால் எந்த விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். எல்லோர் வாழ்விலும் ஒரு கதை இருக்கும். அதை தாண்டி வெற்றி பெற வேண்டும்.
குடும்பத்தினரை அன்பால் கவர்ந்த பெண்கள் தலைமுறை, தற்போது குறைந்து வருவது என்பது வருத்தமான விஷயம் தான். குடும்பம், கலாச்சாரம் என்கிற கட்டமைப்பு எங்கே போய்விடும் என நினைக்க வேண்டியுள்ளது.
பிள்ளைகளுக்கு நாம் தான் அன்பை ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் 50 வழக்குகள் இருந்த நிலை மாறி, தற்போது மொத்த அலுவலகத்தை ஒப்படைத்தாலும் போதவில்லை. மக்கள் இங்கு தான் வருகின்றனர். விட்டுக்கொடுக்காமல் போவது தான் இதற்கு காரணம்.
அம்மா, மகளாக இருந்தாலும் 60 சதவீதம் தான் ஒத்துப்போகும். 40 சதவீதம் தனிமனித இடைவெளி இருக்கும். கணவன், மனைவி, அம்மா, மகள், மகன் என யாராக இருந்தாலும் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாது. ஒவ்வொருவரின் தனிமனித இடைவெளியை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் எந்த உறவாக இருந்தாலும் சீராக இருக்கும் என்றார்.