/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைதிகளுக்கு சலுகை வழங்க உறவினர்களிடம் 'ஜிபே' வசூல்; தேனி காவலர் சஸ்பெண்ட்
/
கைதிகளுக்கு சலுகை வழங்க உறவினர்களிடம் 'ஜிபே' வசூல்; தேனி காவலர் சஸ்பெண்ட்
கைதிகளுக்கு சலுகை வழங்க உறவினர்களிடம் 'ஜிபே' வசூல்; தேனி காவலர் சஸ்பெண்ட்
கைதிகளுக்கு சலுகை வழங்க உறவினர்களிடம் 'ஜிபே' வசூல்; தேனி காவலர் சஸ்பெண்ட்
ADDED : பிப் 16, 2025 03:43 AM
மதுரை : மதுரை சிறையில் சில கைதிகளுக்கு சலுகைகள் வழங்க உறவினர்களிடம் 'ஜிபே' மூலம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி காவலர் ஒருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கஞ்சா, அலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலையில் சில காவலர்கள் மூலம் 'சப்ளை' செய்யப்படுகிறது. சிறைக்குள் திடீர் சோதனையின்போது கஞ்சா சிக்கும் போது, எந்த காவலர் மூலம் சப்ளையானது என்பதை கைதிகள் சொல்வதில்லை. காவலர்களாக சிக்கிக்கொண்டால் உண்டு.
காவலர்கள், அதிகாரிகள் சிலர் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது 'ஜிபே' மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு 'ஜிபே'மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன்காரணமாக அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சிறை அதிகாரிகள், கைதிகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டிய சிறை விஜிலென்ஸ், உளவுப்பிரிவு போலீசார் கண்டும், காணாமலும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலும் மெத்தனமாக உள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு உள்ளே நடக்கும் பல விஷயங்கள் சிறை அதிகாரிகளால் மறைக்கப்பட்டும் வருகிறது. கைதிகளை கண்காணிக்கும் சிறை நிர்வாகம், காவலர்களையும் கண்காணித்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

