/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்ணின் வயிற்றில் 41 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
/
பெண்ணின் வயிற்றில் 41 கிலோ கருப்பை கட்டி அகற்றம்
ADDED : மே 30, 2024 08:40 PM
மதுரை,'கோவையைச் சேர்ந்த 52 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 41 கிலோ கருப்பை கட்டியை மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் சித்ரா, டாக்டர்கள் ஞானப்பிரியா, ரவீணா, தமிழ் நவீனா, மயக்கவியல் டாக்டர்கள் கணேஷ் பிரபு, டாக்டர்கள் மகேஸ்வரி, சித்ரா தேவி, ரமா தேவி குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
டாக்டர் சித்ரா கூறியதாவது: பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதே சிறந்த வழி. இந்த பெண்ணுக்கு 40 செ.மீ.,க்கு 32 செ.மீ., அளவுள்ள பெரிய கருப்பை கட்டி இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும் போது பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவம், இருதயவியல் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் குழு நோயாளியை கவனமாக மதிப்பீடு செய்தனர்.
அதன் பின் அந்த பெண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார். அகற்றப்பட்ட கட்டியின் எடை 41 கிலோ. அதில் 29 லிட்டர் மியூசினஸ் திரவம் இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பெண் குணமடைந்து வருகிறார். நோயாளிக்கு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது என்றார். டாக்டர்களை வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.