ADDED : நவ 20, 2025 06:03 AM

மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் திலகர்திடல் போக்குவரத்து போலீஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. காதை செவிடாக்கும் ஹாரன்களை அகற்றி அபராதம் விதித்தனர்.
ஹாரன்களால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் தங்கமணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உதவிகமிஷனர் இளமாறன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது:
டூவீலர் ஹாரன் 80 டெசிபல், மூன்று சக்கர வாகனங்களுக்கு 82 டெசிபல், நான்கு சக்கர வாகனங்களுக்கு 85 டெசிபல், கனரக வாகனங்களுக்கு 92 டெசிபல் அளவு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீறும் வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதிக ஒலி சத்தத்தால் நாய் உள்ளிட்ட விலங்குகள் பயந்து ரோட்டில் வேகமாக ஓடும்போது விபத்து ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட சப்தத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

