/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 24, 2025 06:44 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வத்தலக்குண்டு-, பேரையூர்,- காரியாபட்டி,- திருச்சுழி-, கமுதி வரையிலான மாநில நெடுஞ்சாலை ரோடு விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
இந்த ரோட்டில் 22வது கி.மீ.,ல் இருந்து 28வது கி.மீ., வரையிலான ரோடு ரூ.18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூனில் பணி துவங்கியது.
வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து பேரையூர் செல்லும் நகர் பகுதி ரோட்டிலும் விரிவாக்கப்பணி துவங்கியது. இதற்காக நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக உள்ள கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் அமைத்து வருகின்றனர். நேற்று அன்னம்பாரிபட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து பேரையூர் ரோட்டுக்கு செல்லும் நகர்புற பகுதியில் உள்ள கடைகளின் முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தாசில்தார் பால கிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சீதாராமன், நகராட்சி கமிஷனர் இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

