/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரை திருவிழாவிற்கு பிறகு வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு
/
சித்திரை திருவிழாவிற்கு பிறகு வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு
சித்திரை திருவிழாவிற்கு பிறகு வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு
சித்திரை திருவிழாவிற்கு பிறகு வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு
ADDED : ஏப் 15, 2025 07:36 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு துவக்கத்தில் நடத்துவதற்கு வசதியாக வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறங்காவலர்கள் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா முடிந்ததும் மண்டபத்திற்கு கற்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்ரலில் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணி தாமதம் ஆனதால் 2021ம் ஆண்டு கும்பாபிஷேகம் தடைப்பட்டது.
இதற்கிடையே தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் பணிகள் வேகம் எடுத்தன. ஒருபுறம் மண்டபம் சீரமைப்பு, மறுபுறம் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் கோயில் அறங்காவலர்கள் குழுக்கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர் தியாகராஜன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல்வர் அறிவித்தபடி 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் வரும் டிசம்பருக்குள் வீரவசந்தராயர் மண்டப பணிகளை முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான நடைமுறை மார்ச்சில் துவங்கிவிடும் என்பதால் அதற்கு முன்னதாக கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை தீவிரமாக உள்ளது. தற்போது வீரவசந்தராயர் மண்டபத்திற்கான கற்துாண்கள் அழகிய வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு கூடல் செங்குளத்தில் தயாராக உள்ளன. சித்திரைத்திருவிழா முடிந்ததும் அவை எடுத்துவரப்பட்டு பொருத்தும் பணி துவங்கி 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.