/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வி அலுவலகங்களில்'மாற்றுப்பணி' அலுவலர்கள் * அரசு பள்ளிகள் திணறல்
/
கல்வி அலுவலகங்களில்'மாற்றுப்பணி' அலுவலர்கள் * அரசு பள்ளிகள் திணறல்
கல்வி அலுவலகங்களில்'மாற்றுப்பணி' அலுவலர்கள் * அரசு பள்ளிகள் திணறல்
கல்வி அலுவலகங்களில்'மாற்றுப்பணி' அலுவலர்கள் * அரசு பள்ளிகள் திணறல்
ADDED : அக் 01, 2024 05:13 AM
மதுரை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மாற்றுப்பணியாக ஆண்டுக்கணக்கில் மதுரை சி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்களில் நீடிப்பதால் பள்ளிப் பணிகள் பாதிக்கின்றன.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பள பில் தயாரிப்பு, தபால்கள் எழுதுவது, அரசு திட்டப் பணிகள் குறித்த விவரக் குறிப்பு தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை இளநிலை உதவியாளர்கள் மேற்கொள்கின்றனர். 'எமிஸ்' பணிகளை தற்போது ஆய்வு உதவியாளர்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளன.
சி.இ.ஓ., மேலுார், மதுரை டி.இ.ஓ., அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்கள், இளநிலை அலுவலர்களை மாற்றுப் பணியில் நியமித்துக்கொள்கின்றனர். இதனால் பள்ளிகளில் அவர்களின் பணிகளை செய்ய ஆட்கள் இல்லாமல் தலைமையாசிரியர்கள் தவிக்கின்றனர்.
கலெக்டர் நடவடிக்கை வேண்டும்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாற்றுப் பணியாக சில நாட்களுக்கு மட்டுமே பணி செய்ய அழைப்பது வழக்கம். ஆனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்களில் ஆண்டுக்கணக்கில் மாற்றுப்பணியில் நீடிக்கின்றனர். இதனால் பள்ளிப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., பணியிடங்கள் பல நாட்களாக காலியாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் இத்துறையில் எடுக்கப்படுவதில்லை. எனவே மாற்றுப்பணியில் உள்ள அலுவலர்களை மீண்டும் பள்ளிகளுக்கு விடுவிக்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.