/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் குடியரசு தினம் கொண்டாட்டம்
/
மதுரையில் குடியரசு தினம் கொண்டாட்டம்
ADDED : ஜன 28, 2024 05:17 AM
மதுரை, : மதுரையில் பள்ளி, கல்லுாரிகள், அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் தே.ராகவன் தேசியக்கொடியை ஏற்றினார். செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். மாநகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் பேசினார்.
கோமதிபுரம் பகுதியை துாய்மையாக வைத்துக்கொள்ள பன்னீர் செல்வன் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் ஏற்றனர். சேதுராம் தொகுத்து வழங்கினார். காசி, கருணையானந்தன், பாண்டி, எம்.காசி, இணைச்செயலாளர்கள் திரவியம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நரசிம்ம ராஜ் நன்றி கூறினார்.
எஸ். பி. ஓ. ஏ., பள்ளி களில் மெட்ரிக் பள்ளி மாணவர் தலைவர் ராகவ கைலாஷ் தேசத்திற்கான பிரார்த்தனையை வாசித்தார். சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் தலைவர் சாய் கிருஷ் ஹரிஹரன் வரவேற்றார்.
காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் ஆர்.நடராஜன் கொடியேற்றினார்.
ஏற்பாடுகளை சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சீதாலட்சுமி, மெட்ரிக் பள்ளியின் பொறுப்பு முதல்வர் லதா செய்திருந்தனர். மாணவர் தலைவர் மருதலட்சுமி நன்றி கூறினார்.
மதுரை குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற அதிகாரி சுந்தரராஜன் கொடியேற்றினார்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் வேல்சங்கர் தலைமையில் துணைத்தலைவர் பால்ராஜ் கொடியேற்றினார்.
கோமதிபுரம் ஸ்ரீ நாக்ஸ் என்விரோ நிறுவனத்தில் இணை நிர்வாக இயக்குனர் பேராசிரியர் இந்திரா பதி, தாயம்மாள் கொடியேற்றினர்.
பொதுமேலாளர் கணேசன் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் வெங்கடபதி தலைமை வகித்தார்.
மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பார்த்தசாரதி தலைமையில் தலைமை ஆசிரியர் ரவி கொடியேற்றினார். சமூக சேவையாளர் அமுதன், ஹரி கணேசன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக நேதாஜி சுவாமிநாதன் பங்கேற்றார்.
வழக்கறிஞர் ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜிராம் நன்றி கூறினார்.
திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் தாளாளர் நோவா கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகளை மாணவியர் நடத்தினர்.
தேச தலைவர்களின் வரலாற்று நாடகங்கள் நடந்தன.
உசிலம்பட்டி
எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஆறுமுகசுந்தரி முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். தர்மவிதயா பவனில் தலைமை ஆசிரியர் மேகலா முன்னிலையில் நிர்வாகி உதயச்சந்திரன் கொடி ஏற்றினார்.
வா டிப்பட்டி
வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் டேவிட் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் கொடியேற்றினார். தேனுாரில் சுழியம் இளைஞர் நற்பணி மன்ற விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டி தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் செல்வம் கொடியேற்றினார். நற்பணி மன்ற செயலாளர் கார்த்திகை குமரன், ஆசிரியர் ஜெயக்குமார், நேரு யுவகேந்திரா தொண்டர் பாண்டீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலுார்
நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ணமுரளிதாஸ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன், அழகர்கோயிலில் சுந்தரராசா உயர்நிலை பள்ளியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., தலைமையில் கொடியேற்றப்பட்டது.
நகராட்சியில் முகமது யாசின், கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஒ., க்கள் செல்லபாண்டியன், ஜெயபாலன், லதாமாதவன் கல்வி நிறுவனங்களில் சேர்மன் மாதவன், மில்டன் பள்ளியில் தாளாளர் ரவிசந்திரன், ஆர்.வி., பள்ளியில் தாளாளர் விஜயலெட்சுமி, ஜாஸ் பள்ளியில் தாளாளர் ஷ்யாம், டைமண்ட் ஜூப்ளி கிளப்பில் தலைவர் மணிவாகசம் கொடியேற்றினர்.
பேரையூர்
பேரையூர் நீதிமன்றத்தில் நடுவர் வேலுச்சாமி கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி கொடியேற்றினார்.
டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., இலக்கியா கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மதனகலா கொடியேற்றினார். எஸ்.ஐ., ஜெயம்பாண்டியன், போலீசார் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மகேஷ்குமார் கொடியேற்றினார். டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெகதீசன் கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர். டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சந்திரா கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். டி.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இளங்கோ கொடியேற்றினார். எஸ்.ஐ., பாஸ்கரன், போலீசார் கலந்து கொண்டனர்.