தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்

 மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்

 மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்


ADDED : ஜன 27, 2026 09:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 09:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் நேற்று நடந்த 77 வது குடியரசு தினம் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

அரசு அலுவலகங்கள் * மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி விழாவில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் கொடியேற்றி வைத்து என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிறந்த சேவையாற்றிய 184 பேருக்கு டீன் விருது வழங்கினார். காந்தி மியூசிய விழாவில் செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பொருளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சர்வ சமயப் பாடல் இசைக்கப்பட்டது.

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி உறுப்பினர் முத்துலட்சுமி, சேர்மத்தாய் வாசன் கல்லுாரி அலோசகர் மாரீஸ்குமார், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ரேமுகி மேலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சியில் துணை மேயர் நாகராஜன் கொடியேற்றினார். கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார்.

மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் கொடியேற்றினார். பதிவாளர்கள் அய்யப்பன், பிரேம்குமார், கூடுதல் பதிவாளர்கள் அப்துல்காதர், ஹேமாவதி பங்கேற்றனர். ரத்ததான முகாம் நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் சரவணன் கொடியேற்றினார். மதுரை மண்டல பொது மேலாளர்மணி முன்னிலை வகித்தார். நேர்மையாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்வழங்கினார்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலத்தின் கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் என சிறந்த பணியாற்றிய37 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆனையூர் உழவர் சந்தையில் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி தலைமையில் கொடியேற்றினர். விற்பனைக்குழு செயலாளர் அழகுராஜா, நுகர்வோர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் தெய்வம் ஏற்பாடு செய்திருந்தார்.

தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் வாசிமலை தேசிய கொடியேற்றினார். சுகம் மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. தானம் மக்கள் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஆனந்தபூபதி, டி. மலைப்பட்டியில் இயக்குநர் குருநாதன் கொடியேற்றினர்.

வேளாண் உணவு வர்த்தக மைய விழாவில் நிறுவனர் ரத்தினவேல் கொடியேற்றினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க விழாவில் சங்கத் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். செயலாளர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லுாரி * மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி.வி.ஆர்., நகர் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நிகழ்ச்சி குழு தலைவர் மீனாட்சி கொடியேற்றினார்.உடற்கல்வி ஆசிரியர்கள் சக்தி பிரகாஷ், தசரதி,பள்ளி ஊழியர்கள் செல்வகுமார், சரவணன், சுயம்பையா, ஹரிகிருஷ்ணன், அமுதா பங்கேற்றனர்.

* ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லுாரியில் முதல்வர் பாலன் முத்துராமலிங்கம் தலைமை வகித்து கொடியேற்றினார். மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். அருளானந்தர் கல்லுாரி, பாத்திமா கல்லுாரி, லேடி டோக் கல்லுாரி தேசிய நலப்பணித்திட்ட மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர்.

வேடர் புளியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சவுந்தர் கொடியேற்றினார்.

மதுரை உலகநேரி அமிர்தா தொடக்க பள்ளியில் வக்பு வாரியக் கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதர் கொடியேற்றினார். தாளாளர் மலையாண்டி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். யாதவர் கல்லுாரியில் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன் கொடியேற்றினார். தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். முதல்வர் ராஜூ வரவேற்றார். செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தார். வளாக வளர்ச்சி அதிகாரி கருப்பணழகு நன்றி கூறினார்.

எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் கல்வி அறக்கட்டளை நிர்வாக அலுவலர் சீதாலட்சுமி கொடியேற்றினார். முதல்வர் லதா முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி கொடியேற்றினார். கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆனந்தராமன் கொடியேற்றினார். தாளாளர் தேவன்குமார், பள்ளி குழுமத் தலைவர் சுரேஷ், முதல்வர் தங்கமுனியாண்டி முன்னிலை வகித்தனர்.

* மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் முதல்வர்(பொறுப்பு) ஜார்ஜ் கொடியேற்றினார். வணிகவியல் துறைப் பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார். மதுரை பெருங்குடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸடெல்லா ஜெயமணி கொடியேற்றினார். முதல்வர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார்.

அரசு சட்டக் கல்லுாரியில் முதல்வர் குமரன் கொடியேற்றினார். பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு உதவிப்பேராசிரியர் கார்த்திக் பரிசு வழங்கினார்.

இளமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுரை நகர் லயன்ஸ் கிளப்தலைவர் ராமச்சந்திரன் கொடியேற்றினார். உதவித்தலைமை ஆசிரியர் லஜபதி தலைமை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். செயலாளர் மாரியப்பன், பொருளாளர் அபுதாகீர், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா, லயன்ஸ் கிளப் பழனிச்சாமி, சண்முக சுந்தரம், பாபு பங்கேற்றனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்உதவித் தலைமையாசிரியர்திருவேங்கடத்தான் கொடியேற்றினார். மதுரைக் கல்லூரி வாரிய இயக்குநர்சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்நாராயணன் வரவேற்றார். மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினர் அமுதன், பங்கேற்றனர். உதவித் தலைமையாசிரியர்ஆதி ஞானக்குமரன் நன்றி கூறினார். 

மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் வானதி கொடியேற்றினார். வேதியியல் துறைத்தலைவர் மீனாட்சி வரவேற்றார். ஆங்கில துறைத்தலைவர் அமலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவியர் பேரவைத் தலைவி சஹானா நன்றி கூறினார்.

ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் கொடியேற்றினார். தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். தாளாளர் ஆனந்த கிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார். ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் மாலா, மெர்சி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பிரபு நன்றி கூறினார்.

மேலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் முருகேசன் கொடியேற்றினார். ஆசிரியர் கார்த்திகா தேவி வரவேற்றார். ஆசிரியர் இளங்கோவன், சமூக ஆர்வலர் ராஜேந்திரன் பேசினர்.

ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழாசிரியர் ராஜா உட்படபலர் செய்திருந்தனர்.

பி.என்.யூ., ஏ.பி.டி., துரைராஜ் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் விசாகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜான் கண்ணன் வரவேற்றார். குடியரசு தின உரையை பால்பாண்டி, சவுராஷ்ட்ரா கல்லுாரி பேராசிரியர் கணேசன் வழங்கினர். கிரேஸ் கமலா நன்றி கூறினார்.

* எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப் பள்ளியில் வழக்கறிஞர் கிருபாகர் கொடியேற்றினார். செயலர் நாகசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தனர். அமெரிக்கன் கல்லுாரியில் முதல்வர் பால் ஜெயகர் கொடியேற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டெல்லா கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஜார்ஜ் கொடியேற்றினார். வணிகவியல் துறை பேராசிரியர் சிவகுமார் வரவேற்றார்.

வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார். சேர்மத்தாய் வாசன் கல்லுாரி விழாவில் மதுரை விலக்கு பிரிவு பாஸ்கரன் கொடியேற்றினார். கல்லுாரி முதல்வர் கவிதா, செயலாளர் பாலகுரு முன்னிலை வகித்தனர்.

பொது அமைப்புகள் திருப்பாலை பம்பாநகர் குடியிருப்போர் நலச்சங்க விழாவில் கவுன்சிலர் ராமமூர்த்தி கொடியேற்றினார். ஓய்வு டி.எஸ்.பி., நம்பிராஜன், சங்கத் தலைவர் முகமது கவுஸ், செயலாளர் பிரகாஷ் ராஜ், பொருளாளர் ஜெகதீசன் பங்கேற்றனர்.

* கிருஷ்ணாபுரம் காலனி, பாரதிநகர் அபுபக்கர்சித்திக் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் தலைமையில் ஹவில்தார் பாபுசாகிப் தேசிய கொடியேற்றினார். தணிக்கைத்துறை சர்தார் மாலிக், நுார்முகமது முன்னிலை வகித்தனர். ஜானி, பிர்தோஸ்கான், சிக்கந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் ஷேக்உசேன் இனிப்பு வழங்கி நன்றி கூறினார்.

மாவட்ட மகா சபாவில் முன்னாள் தலைவர்ராமதாஸ் கொடியேற்றினார்.தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். திருநகர் மக்கள் மன்றத்தில் துணைத் தலைவர்மனோகரன் கொடியேற்றினார்.நிர்வாகக் குழு உறுப்பினர் புள்ளிக்குமார் வரவேற்றார். இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.

எஸ்.டி.பி.ஐ., மதுரை வடக்கு சார்பில் மாவட்ட தலைவர் பிலால் தீன் கொடியேற்றினார்.துணைத் தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பக்ருதீன், வர்த்தக அணிமாவட்ட தலைவர் நூர் முகம்மது, பஹர்தீன் பங்கேற்றனர்.

ஜான்ஸி ராணி பூங்காவில் நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்குமார் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். பொய்கைகரைப்பட்டியில் மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதியில்மதுரை மாவட்ட நீதிபதிராஜசேகரன் கொடி ஏற்றினார்.

விடுதி நிறுவனர்கள் கோபி, பாஸ்கர் தலைமை வகித்தனர். மதுரை வடக்குமாசி வீதியில் மதுரை காபி டீ வர்த்தக சங்க அலுவலகத்தில் தலைவர் சுகுமாரன் கொடியேற்றினார். மதுரை ஆனையூர் மலர் நகர், செல்வா கார்டன் பகுதியில் ஆனையூர் சப் இன்ஸ்பெக்டர் இனியன் கொடியேற்றினார். குடியிருப்போர் சங்கத் தலைவர் ராமலிங்கம், எழுத்தாளர் காயத்ரி மஹதி முன்னிலை வகித்தனர்.

கே.கே.நகர் நியூ எல்.ஐ.ஜி., நகர் காலனியில் தலைவர் ஈஸ்வர்லால் கொடியேற்றினார். கவுன்சிலர் மாலதி, செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் குமரப்பன் நன்றி கூறினார்.

செல்லூர் இந்திரா நகர் பாரதி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தில் பாபு கொடியேற்றினார்.

தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வைபவி வைஷாலி இனிப்புகள் வழங்கினார்.கோமதி புரம் தென்றல்நகர் குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் ராகவன் கொடியேற்றினார். செயலாளர் ரகுபதி வரவேற்றார். வழக்கறிஞர்சேதுபதிசிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

விஸ்வநாதபுரம் விரிவாக்க நலச்சங்கத்தில் முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வாசுகி கொடியேற்றினார். செயலாளர் சத்தியராஜ் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரோகினி, நிர்வாகிகள் பாலு, சீத்தாராமன், பழனிகுமார் பங்கேற்றனர்.

அழகர்கோவில் துாயனேரி வசந்தபாபு நகர், மீனாட்சி அம்மாள் நகர் மற்றும் அழகுமலையான் நகர் குடியிருப்பு மக்கள் தேசியக் கொடி ஏற்றினர்.

மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சார்பில்முதன்மை மாவட்ட நீதிபதி சிவ கடாட்சம் கொடி ஏற்றினார். தலைவர் பாஸ்கரன், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.

நரிமேடு சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்க விழாவில் ஓய்வு பெற்ற வணிகவரி உதவி கமிஷனர் சென்ராயன் கொடியேற்றினார். செயலாளர் சையது அப்துல் காதர், பொருளாளர் பத்மநாபன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். துணை தலைவர் ஜெகநாதன், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஆலோசகர் கல்யாணி, மகளிரணி இணை செயலாளர் சித்ரா, மூத்த உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மதுரை மாவட்டம், கிளைகள் சார்பில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் எஸ்.எஸ்.காலனியில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் இல்லத்தில் கொடியேற்றப்பட்டது. அம்மா கேட்டரிங் கிருஷ்ணய்யர், அனைத்து கிளை தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் செய்திருந்தார்.

ஆண்டாள்புரம் அக்ரிணி வளாகத்தில் சங்க தலைவர் மயில்வேல் கொடியேற்றினார். செயலாளர் சேகர் வரவேற்றார். துணை பொது மேலாளர் முருகானந்தம் இனிப்பு வழங்கினார்.

இணை செயலாளர் வாஞ்சீஸ்வரன், குடியிருப்போர் பங்கேற்றனர். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார். சாக்கு வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் ஷிவபாலன் தலைமையில் தெப்பக்குளம் எஸ்.ஐ., கொடியேற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, டாக்டர் சம்பத் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சையது அபுதாஹீர் இனிப்பு வழங்கினார்.

திருப்பரங்குன்றம் * திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனில் நிலைய மேலாளர் ரங்கராஜன் கொடியேற்றினார். தென்னக ரயில்வே மதுரை கோட்ட பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுந்தரம், பணியாளர்கள் அகல்யா, வெங்கடேசன், பிரியங்கா, முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன் பங்கேற்றனர்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் கருப்பசாமி தலைமையில் மூத்த உதவியாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். பணியாளர்கள் ஆனந்தபாபு பிரியதர்ஷினி பங்கேற்றனர்.

ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் சமூக ஆர்வலர் செல்வரங்கராஜ் கொடியேற்றினார். மக்கள் நல மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் காளிதாசன், அண்ணாமலை, சங்கரைய்யா, குப்புசாமி, துர்காராம், ரவிச்சந்திரன், கந்தராஜ், துளசிதாஸ், அரவிந்தன், ராமகிருஷ்ணன், ஆனந்தன், சுப்புராம் பாண்டி, அழகர் கலந்து கொண்டனர். தொழிற்சங்க தலைவர் கண்ணன் இனிப்பு வழங்கினார்.

அகில இந்திய திரிணமுல் காங்., சார்பில் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் தலைமையில் இளைஞரணி தலைவர் ஹரி விக்னேஷ் குமார் கொடியேற்றினார். நிர்வாகிகள் குமார், ஸ்ரீதரன், கமர்தீன், மம்சவல்லி கலந்து கொண்டனர். வ. உ. சி., சிலை முன்பு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஜோதி நடுநிலைப் பள்ளியில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் வெங்கட்ராஜ், துர்கா, நரசிம்ம பாண்டியன் பங்கேற்றனர்.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் செயலாளர் ஸ்ரீதர் கொடி ஏற்றினார். கல்லுாரித் தலைவர் விஜயராகவன், கவுரவத் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராம சுப்பையா பங்கேற்றனர். என்.சி.சி. வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் தலைமை வகித்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றினார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தமீம் அசாருதீன் வரவேற்றார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

என்.சி.சி., அலுவலர் ஆதி பெருமாள்சாமி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கார்த்திக்குமரன் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சமுத்திரச் செல்வி நன்றி கூறினர்.

திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் சரவணன் கொடியேற்றினார். செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், வழக்கறிஞர்கள் அசோகன், பாலா மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். அவனியாபுரம் வலையப்பட்டி ஜோதி ஆரம்ப பள்ளியில் முன்னாள் ஊராட்சி தலைவர் வீரபாண்டி கொடியேற்றினார். பள்ளித் தலைவர் ராமதாஸ் இனிப்பு வழங்கினார்.

கிராமத்தினர் சார்பில் மாணவர்களுக்கு பென்சில், பேனா வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எல்லம்மாள், ஆசிரியர்கள் ஊர்மிளா, செல்வ சுந்தரி பங்கேற்றனர். விளாச்சேரியில் காங்., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கொடியேற்றினார். நிர்வாகிகள் ராமர், ஜெயக்கொடி, அக்கினி கலந்து கொண்டனர். ஐயப்பன் இனிப்பு வழங்கினார்.

திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவஜோதி கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் வீரக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் கவுசல்யா விஜயலட்சுமி பங்கேற்றனர். நீதிமன்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்தார்.

நீதிபதி மணிகண்டன் முன்னிலை வகித்தார். நீதிபதி செல்வகுமார் கொடியேற்றினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி, செயலாளர் திலிப் குமார், பொருளாளர் விஜய், மூத்த வழக்கறிஞர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.

தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ் கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், நாகேந்திரன் பங்கேற்றனர். கிளைச் சிறை கைதிகளுக்கு இனிப்பு, காலை உணவு வழங்கப்பட்டது. கிளைச் சிறையில் கண்காணிப்பாளர் சங்கரசுப்பு கொடி ஏற்றினார்.

உதவி கண்காணிப்பாளர் சுந்தரேஸ்வரர் உட்பட பலர் பங்கேற்றனர். நகராட்சி நிகழ்ச்சியில் தலைவர் ரம்யா கொடியேற்றினார். துணைத் தலைவர் ஆதவன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னச்சாமி, ரவி, வினோத், அமுதா, மங்களகவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆலம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அருமைராஜ் கொடியேற்றினார். பத்தாவது வார்டு த.மு.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் அஜ்மீர் அலி கொடியேற்றினார். துணைத் தலைவர் சையது அப்துல் கரீம், கவுன்சிலர் ரம்ஜான் பேகம், வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டனர்.

இறையன்பு நுாலக நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜசேகரன் கொடியேற்றினார்.

நுாலக நிறுவனர் பார்த்தசாரதி வரவேற்றார். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் மகபூப் பாட்ஷா கொடியேற்றினார். நிர்வாகிகள் ரகுநாதன், பாலகிருஷ்ணன், நடராஜன், முருகேசன், ஆலோசகர் வெங்கட கிருஷ்ணன் பங்கேற்றனர்.

உசிலம்பட்டி உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார் கொடி ஏற்றினார். சிறைத்துறை கண்காணிப்பாளர் மீர்ஸ்உசேன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். சிறைச்சாலை கைதிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

உத்தப்பநாயக்கனுார் ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராஜ்குமார், ரத்தினசாமிநாடார் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவபிரபு, உசிலம்பட்டி ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் ஆனந்த் கொடி ஏற்றினர். தாளாளர் அருள்மாணிக்கம், நிர்வாகிகள் ரோஸ்சுமதி, ஜெயந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பொன் கருணாநிதி கொடி ஏற்றினார். துணை முதல்வர் ஷோபா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தர்மவித்யாபவன் நர்சரி பள்ளி முதல்வர் மேகலா முன்னிலையிலும், அரிசன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையிலும் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினர். சின்னக்கட்டளை பாரதியார் நர்சரி, பிரைமரி பள்ளியில் முதல்வர் ஆனந்தராஜா முன்னிலையில் நிர்வாகி திருமலைராஜன் தேசியக்கொடி ஏற்றினார்.

மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரியில் நிர்வாகி சென்னகிருஷ்ணன், முதல்வர் கருப்பசாமி முன்னிலையில் நிர்வாகி லோகநாதன், கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் நிர்வாக அலுவலர் சந்திரன், முதல்வர் செல்வகுமாரி முன்னிலையில் நிர்வாகி சுப்பிரமணி, பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சுபாராஜன் முன்னிலையில் நிர்வாகி பெருமாள், மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி செல்வராஜ், முதல்வர் தனபாக்கியம் முன்னிலையில் நிர்வாகி ராமகிருஷ்ணன் கொடி ஏற்றினர்.

எழுமலை விச்வ வித்யாலயா பள்ளியில் முதல்வர் யுவராஜா, நிர்வாகிகள், ஆசிரியர்கள் முன்னிலையில் தாளாளர் பாண்டியன் கொடி ஏற்றினார்.

வாடிப்பட்டி பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் பள்ளிக் குழுத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் நாகேஸ்வரன் கொடியேற்றினார். லயன்ஸ் கிளப் தலைவர் கரிக்கோல் ராஜ், செயலாளர் குணசேகரன், உறுப்பினர்கள் குருசாமி, பாலாஜி முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் வெங்கட லட்சுமி வரவேற்றார். ராமநாயக்கன்பட்டி முன்னாள் வார்டு உறுப்பினர் கார்த்திகா, கிளப் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

பாலமேடு துவக்க பள்ளியில் தலைமையாசிரியை சுபிதாரணி தலைமை வகித்து கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி ராம் கிஷோர் தலைமை வகித்தார். நீதிபதி செல்லையா கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துமணி, செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் தயாநிதி, அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.

தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் கொடியேற்றினார். தனித் தாசில்தார் பார்த்திபன், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா பங்கேற்றனர். சோழவந்தான் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கொடியேற்றினார்.

தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிரகாஷ், சோழவந்தான் பேரூராட்சி தலைவர், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்

வாடிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டியன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். பரவை பேரூராட்சியில் தலைவர் கலாமீனா கொடியேற்றினார்.

துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜூலான் பானு வரவேற்றார். வார்டு கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டி, ரமேஷ், பாண்டி,கீதா,செபஸ்தியம்மாள் பங்கேற்றனர்.

மேலுார் மேலுாரில் சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, உரிமையியல் நீதிபதி மகாராஜா, நீதித்துறை நடுவர் தென்றல் முத்து கொடியேற்றினர். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் திருமேனி, சுரேந்தர் கலந்து கொண்டனர்.

மில்டன் பள்ளியில் தாளாளர்கள் ரவிச்சந்திரன், வின்சென்ட், ஆர்.வி. பள்ளியில் தாளாளர் விஜயலட்சுமி, ஜாஸ் பள்ளியில் தாளாளர் ஷ்யாம், கிடாரிப்பட்டி லதா மாதவன் கல்வி நிறுவனங்களில் சேர்மன் மாதவன் கொடியேற்றி னர்.

இடையபட்டி இந்தோ திபெத் எல்லை காவல் படை முகாமில் டெபுடி கமாண்டண்ட் நரேஷ் சந்திரபால் கொடியேற்றி, வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். உயிர் நீத்த வீரர்களின் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமது யாசின் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

பேரையூர் நீதிமன்றத்தில் நடுவர் ஆனந்தராஜா தேசிய கொடியை ஏற்றினார். வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி கொடியேற்றினார்.

வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். ஏ.எஸ்.பி அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., அஸ்வினி கொடியேற்றினார்.

அரசு மருத்துவமனையில் டாக்டர் மகேஷ்குமார் கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மருதலட்சுமி கொடியேற்றினார். பேரூராட்சியில் தலைவர் காமாட்சி கொடி ஏற்றினார்.

பேரூராட்சி பணியாளர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெகதீசன் கொடியேற்றினார். எஸ் கீழப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சுமதி கொடியேற்றினார்.

* டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் தலைவர் முத்துகணேசன் கொடியேற்றினார். லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சந்திரா கொடியேற்றினார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் தங்கராம் கொடியேற்றினார் டாக்டர்கள், செவிலியர் பங்கேற்றனர்.

சோழவந்தான் * பேரூராட்சியில் தலைமை எழுத்தர் மனோன்மணி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. சேர்மன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், குருசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெஸி பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தீபா கொடியேற்றினார்.

சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுந்தரவல்லி பங்கேற்றார்.

மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us