ADDED : ஜன 28, 2026 06:41 AM
திருப்பரங்குன்றம்: மதுரையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசியக்கொடி ஏற்றினார். விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தலைமையில் வீரர்கள் கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சவுராஷ்டிரா கல்லுாரியில் கவுன்சில் உறுப்பினர் முரளிதாஸ் கொடி ஏற்றினார். செயலாளர் குமரேஷ், கவுன்சில் உறுப்பினர் வெங்கடேஷ்வரன், மதுரை ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வரவேற்றார். பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
கரும்பாலை பி.டி. காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்க விழாவில் செயலாளர் காளிபிரகாஷ் வரவேற்றார். தலைவர் செல்வராஜ் கொடி ஏற்றினார். கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் பரிசு வழங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஷோபனா, தங்கமணி, மாவட்ட சட்ட உதவி மைய வழக்கறிஞர் முத்துக்குமார், சங்கத் துணைத் தலைவர் மகுடீஸ்வரன், ரெட்கிராஸ் அமைப்பு நிர்வாகிகள் டேவிட், அறிவழகன், பெரியநாயகம், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி சேர்மன் பிரேமா கலந்து கொண்டனர்.
திருநகர் மக்கள் மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு துணைத் தலைவர் பொன் மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் புள்ளிக்குமார் வரவேற்றார். இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் பிச்சுமணி , திருநகர் ஜெயண்ட்ஸ் குரூப் தலைவர் பிரசன்னவெங்கடேஷ், பட்டிமன்றப் பேச்சாளர் மலர்விழிபழனியப்பன் பேசினர். நிர்வாகக் குழு உறுப்பினர் பாக்கியம் நன்றி கூறினார்.
பசுமலை தியாகராஜர் காலனியில் பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட முன்னாள் படை வீரர் பிரிவு மாவட்ட தலைவர் பழனிச்சாமி அவர்களின் ஏற்பாட்டில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆண்டி, சுகந்தவிஷ்ணு, ராஜபாண்டி, சிவ பாலாஜி, ஆனந்தன், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்கு வட்டார வள மையத்தில் மேற்பார்வையாளர் மஞ்சுளா கொடியேற்றினார். ஆசிரியர் பயிற்றுனர் சிவபார்வதி கவுரவிக்கப்பட்டார். இயன்முறை மருத்துவர் சீனிவாசன் நன்றி கூறினார். அமலஜோசப் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வாடிப்பட்டி பரவை மங்கையர்கரசி மகளிர் கல்லுாரியில் தலைவர் அசோக்குமார் தலைமையில் விழா நடந்தது. துணைத் தலைவர் சக்தி பிரனேஷ், சார்பு தலைவர் சரவணப் பிரதீப் குமார், கல்வி புலத் தலைவர் செந்துார் பிரியதர்ஷினி, இணைத் தலைவர் திவ்ய மீனு பிரித்த, டில்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி முதல்வர் சுனிதா, பொறியியல் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் பேசினர். மகளிர் கல்லுாரி மாணவி சித்திர பாலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரிசில்லா நன்றி கூறினார்.
