ADDED : ஜன 23, 2026 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன.26ல் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,
ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கை, வரும் நிதியாண்டுக்கான வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், துாய்மை பாரத இயக்கம் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

