/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெ.,க்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை
/
ஜெ.,க்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை
ADDED : பிப் 12, 2024 05:24 AM
மதுரை: மதுரையில் அ.தி.மு.க., லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், செல்லுார் ராஜூ, மணியன், உதயகுமார், வளர்மதி ஆகியோர் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை, கோரிக்கை மனுக்களைப்பெற்றனர்.
அக்குழுவினரிடம் அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணை செயலாளர் டாக்டர் சரவணன், துணை செயலாளர் டாக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் அளித்த மனுவில்,'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் மாவட்ட பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வட மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்,' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.