/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் குத்தகையை ரத்து செய்ய கோரிக்கை
/
கண்மாய் குத்தகையை ரத்து செய்ய கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2025 03:35 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூக நலத்திட்ட பாதுகாப்பு துணை கலெக்டர் கார்த்திகாயினி உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
தோடனேரி கிராம கமிட்டியினர் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் அளித்த மனுவில், ''தோடனேரி கண்மாய் 1500 ஏக்கருக்கும் மேலான பரப்பில் உள்ளது. இங்கு மீன்பாசி குத்தகையை அதிகாரிகள் அறிவிப்பு இல்லாமல் ஏலம்விட்டுஉள்ளனர். ஏலம் எடுத்தவர்கள் மீன்வளர்ப்புக்காக கோழிப்பண்ணை கழிவுகளை அங்குகொட்டி தண்ணீரை பாழ்படுத்திவிட்டனர்.
இரு ஆண்டுகளாக ஏலமிடுவதை நிறுத்தி வைத்திருந்தோம். இம்முறை மீண்டும் எந்த தகவலும் இல்லாமல் ஏலம்விட்டுவிட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
வலைசேரிபட்டி சரவணன் மனுவில், ''கொட்டம்பட்டியில் ரூ.4.9 கோடி மதிப்பில் கட்டிய புதிய பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா காணாமல் உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் கட்டி பஸ்ஸ்டாண்டை திறக்க வேண்டும்'' எனத்தெரிவித்துள்ளார்.