கார்த்திகை தீபம் ஏற்றும் போது வேதமந்திரம் ஒலிக்க கோரிக்கை
கார்த்திகை தீபம் ஏற்றும் போது வேதமந்திரம் ஒலிக்க கோரிக்கை
UPDATED : நவ 21, 2026 05:10 PM
ADDED : நவ 21, 2026 05:10 PM
மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நவ.24 திருக்கார்த்திகையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது வேத மந்திரம், மங்கல இசை ஒலிக்க வேண்டும் என ஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்டத் துணைத்தலைவர் பரமசிவம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தீபத்துாணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றவேண்டும். இந்த நிகழ்வில் கலெக்டர் நோடல் அதிகாரியாக இருந்து அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த வேண்டும். கார்த்திகை தீபத்தின் மூலம் முருகப் பெருமானை தரிசனம் செய்ய உள்ளோம்.
ஆழ்ந்த மத நம்பிக்கை, இறை உணர்வுடன் கூடிய இந்த விழாவில் வேத மந்திரங்கள், மங்கல இசை ஒலிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மகாதீபம் ஏற்றி ஒளிரும் போதும், குளிர வைக்கப்படும் போதும் ஆன்மிக ரீதியான சடங்குகளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார். ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் அரசு பாண்டி, வழக்கறிஞர் முன்னணி மாவட்ட துணைத்தலைவர் சுப்பையா உடனிருந்தனர்.
