தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

 ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

 ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 24, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை, சிந்தாமணி அருகே மேம்பாலம் அமைக்க அத்தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மத்திய ரயில்வே இணை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே லெவல் கிராசிங் இருந்த போது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஹார்விப்பட்டிக்கு பலர் எளிதாக சென்றுவந்தனர். அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டதும் பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் லெவல் கிராசிங்கை மூடியது.

இதனால் பொது மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாலம் வழியாக செல்லும் நிலையுள்ளது. துாரம் காரணமாக பலர் ஆபத்தை உணராமல் தண்ட வாளத்தை கடந்து செல்கின்றனர். அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல் திருப்பரங் குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி ரோடு, சென்னை - குமரி நான்கு வழிச்சாலை, ராமேஸ்வரம் ரோட்டை இணைக்கும் போக்குவரத்து நிறைந்த முக்கிய பகுதியாக உள்ளது. அப்பகுதியில் செயல்படும் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க 2013 அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.45 கோடி ஒதுக்கப் பட்டு முதற்கட்டமாக மண் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். சோமண்ணா அனுப்பிய பதிலில் கூறி யிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் பகுதி யில் சுரங்கப்பாதை அமைக்க சாத்தியமில்லை. நடை மேம்பாலம் அமைக்க முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சிந்தாமணி பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us