/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிக்குச் செல்லும் பாதையை சீரமைக்க கோரிக்கை
/
பள்ளிக்குச் செல்லும் பாதையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2025 01:48 AM

சோழவந்தான்; சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி ராஜா: சக்கரப்பநாயக்கனுார் ஊருக்குள் செல்லும் ரோட்டில் பிரிந்து 500 மீ., தொலைவில் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி செல்லும் ரோட்டின் இருபுறமும் கருவேல மரங்கள் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது. ரோடு முழுவதும் கருவேல முற்கள் சிதறி கிடப்பதால் மாணவர்கள் காலில் குத்தி காயம் அடைகின்றனர்.
காற்றடி காலங்களில் மரங்கள் வேகமாக அசைவதால் மாணவர்கள் வாகனத்தில் செல்வோர் மீது கருவேலமுற்கள் அடித்து காயத்தை ஏற்படுத்துகின்றன. ரோட்டின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதுடன் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக் சீர்கேடு நிலவுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.