/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள் மீட்பு
/
கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள் மீட்பு
ADDED : ஜன 31, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி:மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த, 11 பேர் மீட்கப்பட்டனர்.
மதுரை, குராயூர் கரும்பு தோட்டத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து, கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 11 பேரை, இரண்டு கை குழந்தைகளுடன், கரும்பு வெட்ட குராயூருக்கு, ஜன., 13-ல் ஏஜன்டுகள் சிலர் அழைத்து வந்தனர்.
அவர்களுக்கு உரிய சம்பளம், உணவு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை தோட்டத்தில் இருந்து வெளியில் செல்லவும் உரிமையாளர் மற்றும் அழைத்து வந்த ஏஜன்டுகள் அனுமதிக்கவில்லை. நேற்று அவர்கள் மீட்கப்பட்டனர்.