நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கனமழையால் மதுரையில் சாலை, சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிவருகிறது.
வைகை ஆற்றில் தேங்கும் உபரிநீர் பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளம் சென்றடைகிறது. இவ்வழித்தடங்களான வைகை தென்கரை ஜீரோ பாயின்ட், புது ராமநாதபுரம் ரோடு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர். பந்தல்குடி கால்வாய் நீர் வழித்தடம், வைகைக்கு நீர்வரத்தை ஆய்வு செய்தனர்.
டி.ஆர்.ஓ.,சக்திவேல், தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு அலுவலர் முகம்மது சபியுல்லா, செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், சேகர் பங்கேற்றனர்.