நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அம்மன்கோவில்பட்டியில் பிரதமர் மோடியின் விஸ்வகர்மா யோஜனா வங்கி சார்பில் கடன் திட்ட முன்பதிவு முகாம் நடந்தது.
பா.ஜ., மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் ஆதிகணேசன் முன்னிலை வகித்தார். மரவேலை செய்பவர், கொத்தனார் உள்ளிட்ட 18 வகையான தொழில் செய்பவர்கள் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் 400 பேர் முன்பதிவு செய்தனர்.
ஏற்பாட்டை ஆன்மிக ஆலய மாவட்ட தலைவர் தர்மலிங்கம் செய்திருந்தார்.
மதுரை கோட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம், கிழக்கு ஒன்றிய தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

