/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 11, 2025 04:28 AM
மதுரை: மதுரை கோமதிபுரத்தில் நடந்த தென்றல் நகர் குடியிருப்போர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத் தலைவராக ராகவன், உப தலைவராக சேதுராம், செயலாளராக ரகுபதி, பொருளாளராக காசி, இணைச் செயலாளர்களாக திரவியம், சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலமடை மேம்பாலப் பணியை முடித்து உடனே திறக்க வேண்டும். தாழை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ரோட்டை சீரமைக்க வேண்டும். மருதுபாண்டியர் வீதியில் போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். குப்பை அகற்ற போதிய துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் நரசிம்மராஜ் நன்றி தெரிவித்தார்.

