ADDED : அக் 14, 2025 04:19 AM
மதுரை: மதுரையில் லேக்ஏரியா குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் துணைத் தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. நிர்வாக குழுஉறுப்பினர் சரவணகுமார் வரவேற்றார். செயலாளர் ஜின்னா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாண்டியராஜன் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். நிர்வாக குழுஉறுப்பினர் சுப்பையா, ஜெயக்குமார், சந்தானகிருஷ்ணன், ராஜ்மோகன், பசூல்ரகுமான் உட்பட பலர் பேசினர்.
மழைக்காலத்திற்கு முன் சாத்தையாறு ஓடையை புனரமைத்து கான்கிரீட் தடுப்புச் சுவரை கட்ட வேண்டும். மேலுார் ரோட்டில் இருந்து லேக் ஏரியாவுக்கு நுழையும் சாலை குறுகலாக உள்ளது. இதனால் மாற்று வழியாக டி.டி.சி., 6வது தெருவில் இருந்து மேற்கு நோக்கி மீன்மார்க்கெட் சாலையை சென்றடையும் வகையில் ஒரு பாலம் அமைக்க வேண்டும்.
வண்டியூர் கண்மாயின் வடகரையில் பாண்டிகோயில் எச்.சி.எல்., அலுவலகம் துவங்கி, மேற்கே காய்கறி சந்தை வரை மேம்பாலம் அமைத்து, மதுரைக்கு தென்பகுதி, கிழக்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். துர்நாற்றம் வீசும் மீன்மார்க்கெட்டை இடம்மாற்ற வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.