/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் துர்நாற்றத்தால் அல்லல்படும் குடியிருப்போர் விசுவசாந்தி நகர் அவலம்
/
கழிவுநீர் துர்நாற்றத்தால் அல்லல்படும் குடியிருப்போர் விசுவசாந்தி நகர் அவலம்
கழிவுநீர் துர்நாற்றத்தால் அல்லல்படும் குடியிருப்போர் விசுவசாந்தி நகர் அவலம்
கழிவுநீர் துர்நாற்றத்தால் அல்லல்படும் குடியிருப்போர் விசுவசாந்தி நகர் அவலம்
ADDED : ஜன 20, 2025 05:40 AM

மதுரை: விசுவசாந்தி நகர் தெருக்களில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மெயின் தெருவில் ஓடும் கழிவு நீரினால் ஏற்படும் கொசுத் தொல்லை, தெருவில் சுற்றித்திரியும் நாய்களாலும் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் பரசுராம் கூறியதாவது: விசுவசாந்தி மெயின் தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை நீர் தெருமுழுக்க ஓடுகிறது. மழைக்காலங்களில் நிலைமை மிகவும் மோசம். இதனால் நோய்த்தொற்று, கொசுத் தொல்லை அதிகம். இதனை தவிர்க்க இங்கு பாதசாளச் சாக்கடை திட்டம் முழுமையாக அமைக்க வேண்டும்.
சில இடங்களில் எப்போதும் நீர் வழிந்து கொண்டே இருப்பதால் ரோட்டில் செல்வோர் சிரமப்படுகின்றனர். தெருக்களில் நாய்த் தொல்லை அதிகம் இருக்கிறது. இரவெல்லாம் குரைத்து கொண்டே இருப்பதால் நிம்மதி போய்விட்டது. தனியே செல்வோரை விரட்டுகிறது. அவற்றை உடனே கட்டுப்படுத்த வேண்டும்.
நாகனாகுளம் கண்மாய் பகுதியில் விளக்குகள் செயல்பாடற்று உள்ளது. இதனால் அந்திமாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. தெருக்களிலும் விளக்குகள் பயனற்ற நிலையில் இருக்கின்றன. சமீபத்தில் அமைத்த ரோடுகள் பள்ளங்களாகவும், குண்டும் குழியுமாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் உள்ளன.
இப்பகுதி காலி இடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களிலும், தேங்கியுள்ள மழைநீரிலும் பாம்புகள் இருக்கின்றன. இவற்றால் பகலிலும், இரவிலும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது.
காலி இடங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி அந்த இடங்களை துாய்மைபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.