ADDED : மே 20, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெற்கு தாலுகாவில் ஜமாபந்தி மே 16 முதல் நடந்து வருகிறது. மேலுார் ஆர்.டி.ஓ., சங்கீதா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் ராஜபாண்டி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
மதுரை வடக்கு தாலுகாவில் ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் மஸ்தான் அலி முன்னிலை வகித்தார். மூன்று நாட்களில் நுாற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இன்று குலமங்கலம் பிர்க்கா, மறுநாள் சாத்தமங்கலம் பிர்க்காவுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.