தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை


ADDED : பிப் 14, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'காதல் திருமணம் செய்து கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான புரிதல் உருவாகும். நாங்கள் இருவரும் 8 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம்,' என்கின்றனர் சிவகங்கை மாவட்டம் மேலமருங்கூரை சேர்ந்த நிருபன் சக்கரவர்த்தி,யாமினி.

நிருபன் சக்கரவர்த்தி கூறியது:

இருவரும் ஒரே கல்லுாரியில் படித்தோம். அப்போதும் சரி இப்போதும் சரி பரஸ்பர மரியாதையுடன் நல்ல புரிதலோடு காதலிக்கிறோம். பெற்றோரின் முழு சம்மதத்தோடு தான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். இருவரது வீட்டிலும் பேசினோம். யாமினி வீட்டில் இருவரும் படித்து முடிக்க வேண்டும். மாப்பிள்ளை கண்டிப்பாக படிப்போடு நல்ல வேலை பார்த்தால் தான் திருமணம் என்று கூறி விட்டனர்.

யாமினிக்காகவே ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு சென்றேன். தற்போது ஆஸ்திரேலியா அரசு உதவியுடன் நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறேன். யாமினிக்காக நான் முயற்சி செய்தது அவர்கள் பெற்றோருக்கு பிடித்தது; ஆகையால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். காதலாக வாழ்க்கை பயணத்தை துவக்கினோம். நல்ல புரிதலோடு காதல் திருமணம் செய்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us