ADDED : ஜூலை 17, 2025 12:35 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். ஜெகநாதன், செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தனர். பொதுச் செயலாளர் மனோகரன் செய்தி அறிக்கை வாசித்தார். பார்த்தசாரதி, தேசிய தகவல்களை பரிமாறிக் கொண்டார். உறுப்பினர் தாமஸ் வில்லியம்ஸ் எழுதிய, 'சோஷியல் குரூப் ஒர்க்' என்ற நுாலை பார்த்தசாரதி வெளியிட, ராமமூர்த்தி பெற்றார். மாநில இணைச் செயலாளர் ரோஹிணிதேவி நன்றி கூறினார்.
சண்முகசுந்தரம், சந்திரன், செந்தில்குமார், ராஜேந்திரன், அரவிந்தன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில், 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியத்தில் எவ்வித பணப்பயனும் இல்லை என்ற அச்சத்தை போக்கி, அனைத்து பயன்களும் கிடைக்கச் செய்ய வேண்டும். பகுதி பகுதியாக ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்திய ரயில்வே சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
மதுரை காமராஜ் பல்கலை ஊழியர்களுக்கு தடையின்றி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.