ADDED : ஆக 12, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளை பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் பி.மாது சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் குணவதி, பேராசிரியர்கள் ரோஹிணிதேவி, ஜான்சிராணி, அனார்கலி விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். முன்னதாக பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், பாஸ்கரன், சுப்ரமணி, செந்தில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.