UPDATED : அக் 07, 2026 08:56 PM
ADDED : அக் 07, 2026 07:19 PM
மதுரை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் பிரிவு எறிபந்து போட்டிகள் மதுரையில் நடந்தன.
மகளிர் போட்டி முடிவுகள்
14 வயது பிரிவில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளி முதலிடம், செயின்ட் கிளாரெட் பள்ளி 2ம் இடம், சக்குடி கல்யாணி பள்ளி 3ம் இடம், கேப்ரன்ஹால் பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் செயின்ட் கிளாரெட் பள்ளி முதலிடம், கல்யாணி பள்ளி 2ம் இடம், பாரதியார் பள்ளி 3ம் இடம், ஷாம் பள்ளி 4ம் இடம் பெற்றன.
19 வயது பிரிவில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசுப்பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி 3ம் இடம், இந்தியன் 3 சி பள்ளி 4ம் இடம் பெற்றன.
ஆடவர் போட்டி
14 வயது பிரிவில் பாரதியார் பள்ளி 2ம் இடம், எம்.என்.யு.ஜெ.ஏ., பள்ளி 3ம் இடம், ஹோலி ஏஞ்சல் பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் எழுமலை பாரதியார் பள்ளி 2ம் இடம், இ.பி.ஜி., பள்ளி 3ம் இடம், குகன் பள்ளி 4ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் திருநகர் எம்.என்.யு.ஜெ.ஏ., பள்ளி முதலிடம், பாரதியார் பள்ளி 2ம் இடம், பி.கே.என். பள்ளி 3ம் இடம் பெற்றன.
