ADDED : ஜன 30, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அய்யங்கோட்டை ஊராட்சி நகரி கிழக்கு தெருவில் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இங்குள்ள 60 வீடுகளுக்கு 10 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.
அப்பகுதி தனியார் நிறுவனங்கள் குடிநீரை அதிகளவில் உறிஞ்சிவிடுவதால் தண்ணீர் கிடைக்கவில்லை என ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.நேற்று காலை மதுரை -- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காலி குடங்களுடன் நுாற்றுக்கணக்கானோர் மறியல் செய்தனர்.
இதனால் காலை 8:50 முதல் 9:10 மணிவரை போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் இருபுறமும் 3 கி.மீ.,க்கு வரிசை கட்டி நின்றன. ஏ.பி.டி.ஓ., கண்ணன், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் வளர்மதி, ஊராட்சி செயலாளர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்தனர்.

