sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : ஆக 31, 2025 04:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அருகே காமராஜர் நகரில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை. மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் முழுமையாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

இது குறித்து ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள், உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் நேற்று மதியம் 12:00 மணிக்கு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். உத்தப்பநாயக்கனுார் போலீசார், வருவாய்த்துறை, ஊராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.

மறியலால் மதியம் 12:00 முதல் 12:30 வரை வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us