ADDED : ஜூலை 08, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் திடீர்நகர் பகுதியில் 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் போர்வெல்களில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, உசிலம்பட்டி எம்.எல்.ஏ., விஜய் ஆழ்துளை கிணறு அமைக்க பரிந்துரை செய்தார். அந்த கிணற்றிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் நேற்று காலை மதுரை - - தேனி ரோட்டில் அப்பகுதி மக்கள் அரைமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
உசிலம்பட்டி ஒன்றிய கமிஷனர் அன்பரசு, போலீசார் சமரசம் செய்தனர்.
