ADDED : ஏப் 14, 2026 11:40 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் கரடிக்கல் ஊராட்சி குன்னனம்பட்டி கிராமத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று காலை திருமங்கலம் - சோழவந்தான் ரோட்டில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ரோட்டில் முட்களை போட்டும், காலிக் குடங்களை வைத்தும் மறியல் செய்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
