ADDED : செப் 23, 2025 04:25 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரத்தில் சேசு சபை நிர்வாகிகளை கண்டித்து ரோடு மறியல் நடந்தது.
இங்குள்ள புனித ஜெர்மேன் 'சர்ச்'சுக்கு சொந்தமானநிலம், வீடுகள் உள்ளன. இவை தொடர்பாக பல மாதங்களாக பிரச்னை நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில் நேற்றும் சர்ச்சுக்கு பூட்டுப் போடப்பட்டு ஞாயிறு திருப்பலி ரத்து செய்யப்பட்டது.
நுாற்றுக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் - நகரி ரோட்டில் மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதித்தது. பின்பு எஸ்.ஐ.,க்கள் முருகேசன், பாபு காந்தி பேச்சு வார்த்தை நடத்தினர். மறியலை கைவிட்டு சர்ச் முன்பு கலையரங்கில் அமர்ந்து தர்ணா செய்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர்.