நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் பி.அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன் 41. இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சபட்டியில் கண்மாய் கரை அருகே துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவரை கொலை செய்து தொங்க விட்டதாக கூறி நேற்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் வி.சி.க.,வினர் விருதுநகர் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் கூத்தியார்குண்டு அருகே அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.