UPDATED : அக் 24, 2026 05:59 PM
ADDED : அக் 24, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி:
கச்சைகட்டியில் குவாரி, கிரஷர்களுக்கு செல்லும் லாரிகள் அதிவேகமாகவும், தார்ப்பாய் கொண்டு மூடாமலும் செல்வதை கண்டித்து அப்பகுதியினர் ரோடு மறியல் செய்தனர்.
பெரியார் நகர் பஸ்ஸ்டாப் அருகே வாடிப்பட்டி, பாலமேடு ரோட்டில் 2 மணி நேரம் மறியலால் போக்குவரத்து பாதித்தது. மாணவர்கள் செல்லும் நேரத்தில் அதிவேகமாக செல்வதால் வெளியேறும் துாசுகளால் உடல்நலம் பாதிப்பதாக கூறி கோஷமிட்டனர். துணை தாசில்தார் மவுண்ட்பேட்டன், போலீசார் சமரசம் செய்தனர்.
