ADDED : ஆக 29, 2026 01:03 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்த ராஜன் 45. உசிலம்பட்டி ஒன்றியத்தில் 25 ஆண்டுகளாக தற்காலிக துாய்மை பணியாளராக இருந்தார்.
சமீபத்தில் அந்த பணியை வேறு ஒரு வருக்கு கொடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த சுந்தராஜன் ஆக.,17 ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அங்கேயே விஷம் குடித்தார். சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை இறந்தார்.
அவருக்கு உரிய நீதி வழங்க வேண்டும் எனக்கோரி உசிலம் பட்டி - பேரையூர் ரோட்டில் நேற்று காலை 9:10 முதல் 11:10 மணி வரை அல்லி குண்டம் விலக்கு அருகில் சுந்தராஜன் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதித்தது. தாசில்தார் கார்த்திகேயன், ஒன்றிய கூடுதல் கமிஷனர் அன் பரசு, சேடபட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
