ADDED : பிப் 02, 2026 05:12 AM
மதுரை: மதுரை நகர் போலீசார் சார்பில் குருவிக்காரன் ரோடு சிக்னல் அருகில், சாலை விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு, திருக்குறள் நுால் பரிசாக வழங்கினர்.
சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளை முன்னிட்டு, போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் தலைமை வகித்து, சாலை விதிகளை விளக்கினார்.
திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி முன்னிலை வகித்தார். டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள், சீட் பெல்ட் அணிந்து வந்த நான்கு சக்கர வாகன ஓட்டிகளையும் ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் நுால், பேனா, இனிப்பு வழங்கப்பட்டது.
சமூகஆர்வலர் சக்தி முருகன், முதலுதவி சமூக நல அறக்கட்டளை மாநில துணைத் தலைவர் செய்யது ரியாஸ் கான், அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள், அன்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முபின் பங்கேற்றனர்.
