ADDED : ஜன 24, 2025 04:42 AM
மேலுார்: மேலுாரில் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்துத் துறை, அகில இந்திய சாலை பாதுகாப்பு செயல் அறக்கட்டளை, வாசன் கண் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். முகாமை மேலுார் டி.எஸ்.பி., சிவகுமார் துவக்கி வைத்தார். பொது மக்கள், ஆட்டோ, வேன் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், அறக்கட்டளை நிறுவனர் அய்யாவு வாசன் கண் மருத்துவமனை பி.ஆர்.ஒ., பிச்சைக்கனி, போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.
* மேலுார் பகுதியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்காக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துராம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், வாகன ஆய்வாளர் சரவணகுமார் பங்கேற்றனர். போதையுடன் வாகனத்தை இயக்க கூடாது, அனுமதித்த எண்ணிக்கையைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றக் கூடாது, சீருடையுடன் பயணிக்க வேண்டும் என்பது போன்ற சாலைவிதிகளை எடுத்துரைத்து, துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
