/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..
ADDED : பிப் 16, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.,15 முதல் பிப்.,14 வரை நடந்தது. நிறைவு நாளையொட்டி லதா மாதவன் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. காந்தி மியூசியத்தில் துவங்கி, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிந்தது.
துவக்க நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமை வகித்தார். போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார் துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு, சித்ரா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஜெயசிங், சோபனா பங்கேற்றனர்.