ADDED : ஜன 21, 2026 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலகம், போலீசார், போக்குவரத்து போலீசார் தீயணைப்பு துறையினர் இணைந்து நடத்தினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், தீயணைப்பு அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனர். முதலுதவிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் காட்டினர். சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

