ADDED : நவ 04, 2026 02:05 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நகர் போலீஸ், மாவட்ட நிர்வாகம், வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் பெரியர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆட்டோக்களை விபத்தின்றி இயக்குவது, பயணிகளிடம் பண்புடன் நடந்து கொள்வது, விபத்தில் உயிர்களை காப்பதில் ஓட்டுநர்களுக்கான சமூக அக்கறை குறித்து விளக்கினர்.
இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, மாரியம்மாள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலமுருகன், சித்ரா, தாசில்தார் கோபி, போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
