தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சாலை பாதுகாப்பு மாத விழா

 சாலை பாதுகாப்பு மாத விழா

 சாலை பாதுகாப்பு மாத விழா


ADDED : ஜன 22, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் யூனிட் அலுவலகம் சார்பில் ஓட்டுனர், பொதுமக்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.

வாசன் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமை ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., கூறுகையில், ''அதிக வேகம், அதிக பாரம், தலைக்கவசம், வாகனத்தை இயக்கும்போது அலைபேசி பயன்படுத்துதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபடாமல் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்'' என்றார். வாகன ஆய்வாளர் மாணிக்கம், நேர்முக உதவியாளர் விஜயராமமூர்த்தி பங்கேற்றனர்.

* மதுரை அப்போலோ நர்சிங் கல்லுாரியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ஹெலனா மேரி பிரதிக்தா தலைமை வகித்தார். மதுரை மத்திய ஆர்.டி.ஓ., பாலமுருகன் பேசுகையில், ''போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன' என்றார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us