தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சாலை பணியாளர் பறை இசை முழக்க போராட்டம்

 சாலை பணியாளர் பறை இசை முழக்க போராட்டம்

 சாலை பணியாளர் பறை இசை முழக்க போராட்டம்


ADDED : ஜன 28, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான பறை இசை முழக்கப் போராட்டம் நேற்று நடந்தது.

கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டத் தலைவர்கள் மணிமாறன், முருகேசன், மாரி, பரமேஸ்வரன், பாலமுருகன், மரிய பசானியோ தலைமை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் துவக்கி வைத்தார்.

சாலைப் பணியாளரின் 41 மாத கால பணிநீக்க காலம் குறித்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற்று, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். கிராம இளைஞர்களை சாலைப் பணியாளராக நியமிக்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து பறையடித்து இசை எழுப்பி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர்கள் மனோகரன், அருள்தாஸ், ராஜா, முருகேசன், மணிமாறன், பாரமலை கோரிக்கை குறித்து பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் பரமசிவன் சிறப்புரை யாற்றினார். மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரை ஆற்றினார்.

மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us